ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட்டிருக்கு தயாராக உள்ளதால் தனது எதிர்கால திட்டங்களில் மிக முக்கியமாக கம்யூட்டர் செக்மென்ட்டுக்கான அதாவது ஆரம்ப நிலை செக்மென்ட்க்கு ஏற்ற மூன்று எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை வருகின்ற 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது.
குறிப்பாக ஏற்கனவே இந்நிறுவனம் காட்சிப்படுத்திய பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள் கான்செப்ட் களில் இருந்து மாறுபட்டதாக துவக்க நிலை சந்தைக்கு ஏற்றதாகவும் இந்த மாடல்கள் அமையும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
Ola Electric bike
நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்குகின்ற இந்நிறுவனம் ரூபாய் 75 ஆயிரம் முதல் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இதை விட குறைவான ஒரு விலையில் மற்றொரு ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக்குகள் ஆனது மிகவும் கவனத்தை பெறும் என்பதனால் இந்த பிரிவிற்கும் இன்று மாடல்களை உருவாக்கி வருவதாகவும் இந்த மூன்று மாடல்களும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அனேகமாக காட்சிக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை தொடர்ந்து விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் படிப்படியாக ஒவ்வொரு மாடலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கலாம் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
முன்பாக அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் போன்ற 4 கான்செப்ட்களை ஓலா நிறுவனம் காட்சிப்படுத்தியது. ஆனால் இந்த மாடல்கள் எல்லாம் பிரீமியம் சந்தைக்கு ஏற்ற மாடல் என்பதனால் இவை 2026 ஆம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது
இந்நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியிட ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்குகின்றது.