ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கும் இந்நிறுவனம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி 5 எலக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்பாகவே, எலக்ட்ரிக் பைக் அறிமுகம் தொடர்பான டீசர் வெளியாகியிருந்த நிலை, கார்களை தயாரிக்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிகா ஃபேக்ட்ரி ஆலையை ஓசூரில் கட்டமைத்து வருகின்றது.
Ola Electric Bike
அட்வென்ச்சர் உட்பட பல்வேறு ஸ்டைலிங் பெற்ற மின்சார பேட்டரி பைக் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்திய சந்தையில் ஓலா S1 Pro , S1 , S1 ஏர் என மூன்று மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில், S1 ஏர் டெலிவரி இந்த மாத இறுதியில் துவங்கலாம்.
வரவிருக்கும், புதிய எலக்ட்ரிக் பைக் மாடல்கள் அனேகமாக 200 கிமீ வரையிலான ரேன்ஜ் வெளிப்படுத்துவதாகவும், மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. தற்பொழுது வரை எந்த நுப்விபரங்களையும் ஓலா எலக்ட்ரிக் வெளியிடவில்லை.