ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி 4க்கு மேற்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் மற்றும் ரூ.1 லட்சம் விலைக்குள் வெளியிடப்பட உள்ள S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுடன் MOVEOS 4 மென்பொருள் மேம்பாட்டினை அறிமுகம் செய்ய உள்ளது.
சமீபத்தில் ஓலா எஸ்1 ஏர் மாடல் விற்பனைக்கு ரூ.1.20 லட்சத்தில் வெளியானதை தொடர்ந்து ரூ.1 லட்சத்திற்கு குறைந்த விலையில் 2kwh பேட்டரி பெற்ற எஸ்1எக்ஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
Ola Electric Bike
நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் ஸ்போர்டிவ் எலக்ட்ரிக் பைக், அட்வென்ச்சர் மற்றும் ரெட்ரோ ஸ்டைல்களை கொண்ட மாடல்களும் எதிர்பார்க்கலாம்.
புதிய எலக்ட்ரிக் பைக் மாடல்கள் அனேகமாக 200 கிமீ வரையிலான ரேன்ஜ் வெளிப்படுத்துவதாகவும், மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. தற்பொழுது வரை எந்த நுட்பவிபரங்களையும் ஓலா எலக்ட்ரிக் வெளியிடவில்லை.
85 கிமீ ரேஞ்சு மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ முதல் 85 கிமீ எட்டும் திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்தில் விற்பனைக்கு வந்த எஸ்1 ஏர் ஸ்கூட்டரை, போலவே பல்வேறு மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. மேலும் விபரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 12 மணிக்கு வெளியிடப்படலாம்.