ஓகினவா ஆட்டோடெக் நிறுவனம், ஜிஎஸ்டி வரி குறைப்பினால் ரூபாய் 3,400 முதல் 8,600 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ரூ.37,000 முதல் ரூ.1.08 லட்சம் வரையிலான விலையில் மொத்தம் ஆறு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.
ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற ஐ பிரெயஸ் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1000 வாட்ஸ் மின் மோட்டார் இயக்க 72V, 45Ah லித்தியம் ஐயன் பேட்டரி மிக வேகமாக சார்ஜில் ஏறும் நுட்பத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக வேகமான சார்ஜ் முறையை பெற்றிருப்பதுடன் இந்த முறையில் 80 சதவீத சார்ஜ் ஏறுவதற்கு 45 நிமிடங்களும், முழுமையான சார்ஜ் ஏறுவதற்கு 6 முதல் 8 மணி நேரம் வரை தேவைப்படுகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்திலும், 170 கிமீ முதல் 200 கிமீ வரை முழுமையான சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 35kph), ஸ்போர்ட்டி ( அதிகபட்ச வேகம் மணிக்கு 65kph) மற்றும் டர்போ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 75kph) என மொத்தம் மூன்று மோட்களை பெற்றுள்ளது.
மேலும் படிங்க – ஆம்பியர் எலெகட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை குறைப்பு
மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது.