ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தின் புதிய பிரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூபாய் 71,990 க்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக ஐ பிரைஸ் மற்றும் பிரைஸ் என்ற இரு ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மூன்றாவதாக விற்பனைக்கு வந்துள்ள பிரைஸ் ப்ரோ மாடலில் 2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1 கிலோவாட் பிரஷ்லெஸ் டிசி மின்சார மோட்டார் (BLDC) பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியில் நீரிலியிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டதாகும். இந்த மோட்டர் அதிகபட்சமாக 2.5 கிலோவாட் மற்றும் மூன்று விதமான ரைடிங் முறைகள் கொண்டுள்ளது – எக்னாமி (30-35 கிமீ வேகம்), ஸ்போர்ட் (50-60 கிமீ வேகம்) மற்றும் டர்போ முறையில் அதிகபட்சமாக 65- 70 கிமீ வேகத்தில் பயணிக்க இயலும்.
அதிகபட்சமாக 110 கிமீ ரேஞ்சை எக்னாமி மோடில் 30-35 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது வழங்கும், அதேவேளை ஸ்போர்ட் மோடில் பயணிக்கும் போது 88 கிமீ ஆக வழங்க உள்ளது. சாதாரண சார்ஜரை 2 முதல் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜாகி விடும்.
இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது. ரெட் பிளாக் மற்றும் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கின்றது.