யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ள 300cc என்ஜின் பெற்ற R3 சூப்பர் ஸ்போர்ட் பைக்கில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த மாடலுக்கு டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
டீலர்ஷிப்பைப் பொறுத்து, முன்பதிவு கட்டணம் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை வசூலிக்கப்படுகின்றது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற டிவிஎஸ் அப்பாச்சி RR 310R, கேடிஎம் RC 390 பைக் போட்டியாளராக விளங்க உள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த R3 பைக் மாடல் நீக்கப்பட்டது. சமீபத்தில் மீண்டும் விற்பனைக்கு வரவிருக்கும் ஃபேரிங் ஸ்டைலை பெற்ற புதிய ஆர்3 பைக்கில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
மற்ற அம்சங்களில் ஆர்3 மோட்டார் சைக்கிள் 298 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் முன்புறத்தில் 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் வழங்கப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்கும்.
14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு பைக்கின் மொத்த எடை 169 கிலோ மட்டுமே ஆகும்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் 2023 யமஹா R3 பைக்கின் விலை ₹ 4 லட்சத்திற்குள் அமைய வாய்ப்பு உள்ளது. விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கலாம். ஆர்3 மாடலை தவிர யமஹா MT-03 பைக்கும் வெளியாக உள்ளது.