இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 2023 ஜூன் 14 ஆம் தேதி புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக எக்ஸ்ட்ரீம் 200S 4V மற்றும் பேஸன் பிளஸ் பைக் உட்பட பிரீமியம் பைக்குகள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த எக்ஸ்ட்ரீம் 160R 4வி பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் , 4 வால்வுகளை கொண்ட என்ஜின் என பவர்ஃபுல்லான மாடலாக விளங்கலாம்.
விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 160R மாடலில் கூடுதல் நிறங்களை பெற்று சிறிய அளவில் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்ற வேரியண்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக வரவிருக்கும் எக்ஸ்ட்ரீம் 160r 4v மாடலில் குறிப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக யூஎஸ்டி ஃபோர்க் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தப்படியாக, Xtreme 160R 4V பைக்கில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கூடுதல் அம்சங்களையும் பெற வாய்ப்புள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மோட்டார்சைக்கிளை அதிக வாடிக்கையாளர்களை கவரும் தோற்றமளிக்க புதிய டூயல் டோன் பெயிண்ட் நிறங்களை பெற வாய்ப்புள்ளது.
இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டு கூடுதலாக மோடுகள் இணைக்கப்படலாம்.
2023 எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலில் 4 வால்வுகளை கொண்டு கூடுதல் பவர் வெளிப்படுத்தலாம். தற்பொழுது உள்ள ஏர் கூல்டு 163cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பெற்று 8,500 Rpm-ல் அதிகபட்சமாக 15 bhp பவர் மற்றும் 6,500-rpmல் 14Nm டார்க் கொண்டு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும்.
விற்பனைக்கு ஜூன் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விலை ரூ.1.25 லட்சத்தில் துவங்கலாம்.