இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஜுபிடர் இரண்டாம் இடத்தில் உள்ளது. மிகவும் நேர்த்தியான அம்சங்களை கொண்ட ஜுபிடரின் கிராண்டே எடிஷன் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்ற ஜுபிடர் இசட்எக்ஸ் வேரியன்டில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
டிவிஎஸ் ஜுபிடர்
110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8 Nm டார்க்கினை வழங்க 5500 rpm எடுத்துக்கொள்ளுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோட் மற்றும் பவர் மோட் இரு பிரிவுகள் கொண்ட மோடினை எஞ்சின் கிடைக்கின்றது.
ஆராய் சான்றிதழின் படி அடிப்பையில் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரவல்லதாகும்.
ஜுபிடர் இசட்எக்ஸ் வேரியன்டில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் போன்றவை முன்பாக கிராண்டே எடிஷனில் பெற்றிருந்தது. ஆனால் அலாய் வீல் மற்றும் சீட் கவர் கிராண்டே மாடலில் இருந்ததை வழங்கவில்லை.
டிரம் பிரேக் மாடல்களில் இரு டயர்களிலும் 130 மிமீ டிரம், டிஸ்க் பிரேக் மாடலில் முன்புறத்தில் மட்டும் 220 மிமீ டிஸ்க் வழங்கபட்டு பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. அடுத்தப்படியாக, பாதுகாப்பு சார்ந்த அம்சத்தினை பெற்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என்பதனை சார்ந்த எஸ்பிடி அம்சத்தை பெற்றிருக்கின்றது.
நீலம் மற்றும் ராயல் வைன் என இரு நிறங்களை பெற்ற டிவிஎஸ் ஜுபிடர் ZX டிரம் பிரேக் மாடல் ரூ. 56,093, மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ. 58,645 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
(ex-showroom Delhi)