தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, வருகின்ற பிப்ரவரி 5ந் தேதி புதிய பிரிமியம் ரக டிவிஎஸ் கிரைபைட் ஸ்கூட்டர் மாடலை வெளியிட உள்ளதாக டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் கிராபைட் ஸ்கூட்டர்
கடந்த ஆட்டோ எக்ஸ்போ 2014 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட கிராபைட் கான்செப்ட் ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
125சிசி அல்லது 150சிசி என்ஜின் கொண்டதாக டிவிஎஸ் கிராபைட் ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் மிக சிறப்பான வடிவமைப்பை கொண்டதாக வரவுள்ள இந்த மாடல் சிறப்பான சைலன்சர் சப்தம் வெளிப்படுத்தகூடியதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிவிஎஸ் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் புகைப்போக்கி சப்தம் மற்றும் பின்புறத்தில் இடம்பெற உள்ள எல்இடி டெயில் விளக்கின் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரம், வருகின்ற பிப்ரவரி 5ந் தேதி டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வெளியிட உள்ள நிலையில் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்த புதிய ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.