டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள புதிய அப்பாச்சி 200 4வி பைக்கில் மூன்று ரைடிங் மோட் உட்பட பல்வேறு சிறப்பான வசதிகள் இணைக்கப்பட்டு முந்தைய மாடலை விட சிறப்பான ரேசிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி 200 இன்ஜின்
பிஎஸ்-6 பெற்ற மாடலை விட 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் பவர் சற்று கூடுதலாக அமைந்துள்ளது. ஆயில் கூல்டு, 4 வால்வு 197.75cc ஒற்றை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 20.82PS பவரை 9000rpm மற்றும் 17.25Nm டார்க் 7250rpm -யில் வழங்குகின்றது. முந்தைய பிஎஸ்-6 அப்பாச்சி 200 மாடலை விட கூடுதலாக 0.3 பிஎஸ் பவர் மற்றும் 0.4 என்எம் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அப்பாச்சி 200 ரைடிங் மோடு
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. இதனை இலகுவான முறையில் சுவிட்ச் மூலமாக மாற்றலாம்.
அர்பன் மோட் என்றால் என்ன ?
அப்பாச்சி 200 பைக் மணிக்கு அதிகபட்சமாக 105 கிமீ வேகமாக வரைறுக்கப்பட்டு மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் செயல்திறன் மிகவும் சீராக அமைந்திருக்கும்.
ஸ்போர்ட் மோட் என்றால் என்ன ?
அதிகபட்ச வேகம் மணிக்கு 127 கிமீ வரை எட்டும் திறனுடன் சிறப்பான ரேசிங் அனுபவத்தை அப்பாச்சி 200 வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயின் மோட் என்றால் என்ன ?
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் அர்பன் மற்றும் ரெயின் மோட் என இரண்டும் ஒரே மாதிரியான இன்ஜின் பவரை வழங்கினாலும், மழை நேரத்தில் ஏபிஎஸ் செயல்பாடு மிக சிறப்பாக வெளிப்படுத்தும். எனவே, பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.
அர்பன் மற்றும் ஸ்போர்ட் மோடுகளுக்கு இடையில் பவர் வித்தியாசம் உள்ளதா ?
அப்பாச்சி 200 பைக்கின் அர்பன் மோட் 17.32PS பவர் மற்றும் 16.51Nm மட்டுமே வெளிப்படுத்தும்.
புதிய வசதிகள்
குறிப்பாக புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரைடிங் சமயத்தில் கியரை அப் அல்லது டவுன் செய்வதற்கான அறிவிப்புகள் கிடைக்கும்.
ஷோவா நிறுவனத்தின் ப்ரீ லோடு டெலிஸ்கோபிக் ஃபோர்க் அட்ஜெஸ்டபிள் முறையில் வழங்கப்பட்டுகின்றது. கிளட்ச் மற்றும் பிரேக் லிவர்ஸ் மூன்று ஸ்டெப் அட்ஜஸ்ட்மென்ட் ஆப்ஷனை கொண்டுள்ளது. இந்நிறுவனம் வழங்கியுள்ள பெரும்பாலான வசதிகள் 200சிசி சந்தையில் முதன்முறையாக பெறுகின்றன.
அப்பாச்சி 200 போட்டியாளர்கள்
2021 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கிற்கு நேரடியான போட்டியாக பல்சர் என்எஸ் 200 விளங்குகின்றது. ஹார்னெட் 2.0 மற்றும் வரவுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலும் விளங்க உள்ளது.
அப்பாச்சி 200 விலை
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை ரூ.1.31,050 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரைடிங் மோட் உட்பட ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் (SmartXConnect) போக்குவரத்து நெரிசலில் உதவுகின்ற GTT (Glide Through Traffic) கொண்டுள்ளது.
மற்றவை
டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டு டூயல் சேனல் அல்லது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்படுகின்றது. முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் 270mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டு 240mm டிஸ்க் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக மேட் ப்ளூ நிறம் உட்பட கருப்பு, மற்றும் வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது.
ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் SmartXonnect ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.