ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள V-strom 800DE மாடலில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்தாலும் கூடுதலான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 82 hp பவர் மற்றும் டார்க் of 78 Nm ஆனது 6,800 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் பெற்று பை-டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது.
அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று மற்றும் மோனோஷாக் அப்சாபர்பர் பெற்றுள்ள பைக்கில் ரைட் பை வயர், டிராக்ஷன் கண்ட்ரோல், முன்புறத்தில் 310 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
மெட்டாலிக் மேட் ஸ்வார்ட் சில்வர், ட்ரைடன் ப்ளூ மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களை பெற்று செங்குத்தான எல்இடி ஹெட்லைட் பெற்று ஏரோடைனமிக்ஸ் ஃபேரிங் பேனல்களை பெற்று , 5 அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் சுஸுகி டிரைவ் மோட் செலக்டர் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற ரைடர் சார்ந்த கருவிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.