Categories: Bike News

2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது

MotoGP edition of 2019 GIXXER SF Series

புதிய 2019 சுசுகி ஜிக்ஸர் SF மாடலை பின்பற்றி மோட்டோ ஜிபி எடிஷன் என்ற பெயரில் டீம் சுசுகி குழுவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 2019 சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி மாடல் விலை ரூ. 1.10 லட்சம் விலையில் வந்துள்ளது.

மோட்டோ ஜிபி பதிப்பு சுசுகியின் பந்தய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில், 2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. வசீகரிக்கும் மோட்டோ ஜிபி வண்ணம் இந்தியாவில் ஜிக்ஸ்சர் எஸ்எஃப் தொடரின் மிக முக்கிய அடையாளமாக மாறியுள்ளது. டீம் சுசுகி எக்ஸ்டார் பாடி கிராபிக்ஸ் முதல் தனித்துவமான பல்வேறு அம்சங்களை இந்த பைக் பெற்றுள்ளது.

14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த 2019 சுசுகி ஜிக்ஸர் மாடலை அடிப்படையாக பெற்ற இந்த சிறப்பு பதிப்பில், குறிப்பாக புதிய ஜிக்ஸர் SF MotoGP பதிப்பு இந்நிறுவனத்தின் சுசுகி ரேசிங் ப்ளூ கலருடன் அதே மாதிரியான தோற்ற பொலிவினை வழங்குகின்றது.  2019 பதிப்பான சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோஜிபி பைக் மாடல் GSX-RR பைக்கின் வடிவ தாத்பரியங்களை பின்னணியாக கொண்டு மேம்பட்ட ஏரோடைனமிக் வடிவமைப்பு ஸ்டைலிங் மற்றும் சிறப்பான முறையில் பாடி ஸ்டிக்கரிங் செய்யபட்டுள்ளது.

விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட மோட்டோ ஜிபி பெற்ற ஜிக்ஸர் SF பைக் விலை ரூ. 735 மட்டும் அதிகரிக்கப்பட்டு, ரூ. 1,10,605 என விலை (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, அடுத்த சில வாரங்களுக்குள் 250சிசி என்ஜின் பெற்ற சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக் மாடலிலும் மோட்டோஜிபி எடிசன் வெளியாக உள்ளதை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.