பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியின் ஸ்கிராம்பளர் 400X பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பைக்கை விற்பனைக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
350சிசி-450சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், மூன்று பைக்குகளை அடுத்த 12 மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆகும்.
RE Scram 440
D4K என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த புதிய பைக் மாடல், வரவிருக்கும் புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெறாமல், ஹிமாலயன் மற்றும் Scram 411 பைக்குகளில் உள்ள 411cc என்ஜினை சிசி அதிகரிக்கப்பட்டு கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் பெறப்பட்ட ஏர் ஆயில் கூல்டு 440cc என்ஜின் பெறக்கூடும்.
வரவிருக்கும் ஹிமாலயன் 450 பைக்கினை விட குறைவான பவர் மற்றும் டார்க் கொண்டிருக்கும். ஆனால், மிகவும் மலிவு மாடலாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இது ஸ்க்ராம் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.
விற்பனையில் உள்ள ஸ்கிராம் 411 மாடலை விட சற்று கூடுதலான விலையில் ஹார்லி எக்ஸ் 440, ஸ்கிராம்பளர் 400x ஆகியவற்றை எதிர்கொள்ளும் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.