ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பிரீமியம் மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆனால் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் அனேகமாக 650சிசி அல்லது 750 சிசி என்ற குழப்பம் நீடிக்கின்றது.
பொதுவாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 சிசி பைக்குகளில் முன்புறத்தில் ஒற்றை டிஸ்க் அமைப்பை மட்டுமே பயன்படுத்தி வருகின்றது ஆனால் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருகின்ற மாடலானது டூயல் டிஸ்க் பிரேக்னைக் கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில் இன்ஜின் வடிவமைப்பிலும் சிறிய மாறுதல்கள் தெரிகின்றது. ஹிமாலயன் மட்டுமல்ல இந்த பிரிவில் இன்ட்ரசெப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி போன்ற மாடல்கள் எல்லாம் வர உள்ளதாக கூறப்படுகின்றது இவற்றின் முழுமையான விபரங்கள் எதுவும் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த வகையில் கிடைக்கப்பெறவில்லை, என்றாலும் கூட அடிப்படையில் இந்த டிசைன் அமைப்பு ஹிமாலயன் 450 பைக்கில் இருந்து பெறப்பட்டது போல அமைந்து இருந்தாலும் கூட வேறுபட்ட வடிவமைப்பினையும் பிரிமியம் தோற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான அம்சங்கள் மற்றும் சிறப்பான இஞ்சின் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்புற சஸ்பென்ஷன் அமைப்பில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வகையிலான அப்சைட் டவுன் போர்க்கு பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் மற்றும் ஃபேரிங் பேனல்கள் எல்லாம் மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது.
முன்புறத்தில் 19 அங்குல வீல் பின்புறத்தில் 17 அங்குலம் கொடுக்கப்பட்டு ஸ்போக்டூ வீல் டியூப் டயர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கலாம் மற்றபடி இந்த மாடலின் முக்கிய விவரங்கள் எதுவும் தற்பொழுது வெளியாகவில்லை.
2025 EICMA அரங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 காட்சிப்படுத்தப்படலாம் அதே சமயத்தில் விற்பனைக்கும் 4.50 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.