ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம்பளர் வகை மோட்டார்சைக்கிளாக வெளியிடப்பட்டுள்ள இன்டர்செப்டார் பியர் 650 பைக்கின் ஆரம்ப விலை ரூ.3.39 லட்சம் முதல் ரூ.3.59 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
650சிசி எஞ்சின் பெற்ற ஐந்தாவது மாடலான பியர் 650ல் மற்ற மாடல்களை போல இரட்டை புகைப்போக்கி பெறாமல் ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில்648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
184 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற பியர் 650 பைக்கின் எடை 216 கிலோ கிராம் கொண்டு முன்பக்கத்தில் 110 மிமீ 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பொருத்தப்பட்டு (ஒரு நிறத்தில் மட்டும் தங்க நிறத்தில்) 100/90-19 M/C 57H டீய்ப் டயருடன் 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 130மிமீ பயணிக்கின்ற டூயல் ஷாக் அப்சார்பருடன் 140/8-17 M/C 69H டயரை பெற்று 270 மிமீ டிஸ்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
4 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரிவனை ல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி டெயில் விளக்குகளுடன் வந்துள்ளது.
Bear 650 Price list
- Broadwalk White ₹3,39,000
- Petrol Green & Wild Honey ₹3,44,000
- Golden Shadow ₹3,51,000
- Two Four Nine ₹3,59,000
(all ex-showroom)