இந்திய சந்தையில் முன்பாக விற்பனை செய்யப்பட்ட CB500X பைக்கிற்கு மாற்றாக புதிய ஹோண்டா NX500 அட்வென்ச்சர் விலை ரூ.5.90 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படுகின்றது.
கடந்த EICMA 2023 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட NX500 பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியானது.
Honda NX500
அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்ற ஹோண்டா என்எக்ஸ்500 பைக் மாடலில் தொடர்ந்து 471cc பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 47.5 hp பவர் மற்றும் 43.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய என்ஜினை விட புதிய மாடலில் கிராங்க் கவுண்டர்வெயிட் மற்றும் பேலன்ஸ் ஷாஃப்ட்டை மேம்படுத்தியுள்ளது.
ஹோண்டா NX500 பைக் மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கம் ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அகலமான பெரிய விண்ட்ஷீல்டு மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு ஃபேரிங் பேனல்கள் மாற்றியமைக்கபட்டு எல்இடி டெயில்லைட் உள்ளது. 5 அங்குல TFT டிஸ்பிளே உடன் ப்ளூடூத் உடன் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி கொண்டதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஹோண்டா பிக்விங் டீலர்கள் மூலம் ரூ.10,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள ஹோண்டா NX500 பைக்கின் விலை 5.90 லட்சத்தில் துவங்குகின்றது.
CBU முறையில் நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கிராண்ட் பிரிக்ஸ் ரெட், மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் பேர்ல் ஹொரைசன் ஒயிட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.