ஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி என்ஜின் பெற்று ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை கொண்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R) மாடலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளதால் மார்ச் மாதம் டெலிவரி துவங்கப்பட உள்ளது. முழுமையாக திரும்ப அளிக்கப்படுகின்ற வகையில் ரூ.2,500 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பு பெற்று அக்ரோஷமான முன்புறத்தை கொண்டுள்ள எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் பைலட் ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ள மாடலின் மிக நேர்த்தியான டேங்க் எக்ஸ்டென்ஷன் அகலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இருபிரிவுகளை கொண்ட இருக்கைகள், மேல்நோக்கிய பின்புற பகுதி என மிக நேர்த்தியாக டைமண்ட் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் ஸ்விங்கார்ம் ஆனது ட்யூபலர் முறையில் வழங்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125ஆரில் உள்ள 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் எஞ்சின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று ஒரு லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோரக் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டுள்ள மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் என இருவிதமாக கிடைக்கின்றது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை
- XTREME 125R IBS – ₹ 99,157
- XTREME 125R ABS – ₹ 1,04,657