இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஜூம் 110 ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய ஹீரோ Xoom 125R ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற மாடல் EICMA 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படலாம்.
டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ள ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் புதிய 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
Hero Xoom 125R
125சிசி பிரிவில் முதன்முறையாக 14-இன்ச் அலாய் வீல் பெற்ற ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் உள்ள 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது. Xoom 125R ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர், மற்றும் டெயில் லைட்டுகளும் எல்இடி ஆக உள்ளது. முதல்-இன்-செக்வென்ஷியல் எல்இடி இண்டிகேட்டர் பெற்றுள்ளது.
ப்ளூடூத் இணைப்புடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கனெக்ட்டிவிட்டி போன்ற அம்சங்களுடன் வருகிறது.
125R ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொண்டு வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் கொண்டுள்ளது.
EICMA 2023 அரங்கில் ஜூம் 125 ஆர் ஸ்கூட்டரை தவிர ஹீரோ 2.5ஆர் ஸ்டன்ட் கான்செப்ட், ஹீரோ ஜூம் 160 மற்றும் வீடா எலக்ட்ரிக் டிர்ட் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.