Car News

புதிய 125சிசி பல்சர் மோட்டார்சைக்கிளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

2024 bajaj pulsar n160 black

மிக வேகமாக வளர்ந்து வரும் 125சிசி மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிதாக பல்சர் N125 மாடலை பஜாஜ் ஆட்டோ வரும் அக்டோபர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. 125சிசி சந்தையில் ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 மற்றும் NS125 என இரண்டு பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

கூடுதலாக வரவுள்ள மாடல் அனேகமாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற N150,N160, மற்றும் N250 போன்ற மாடல்களில் இருந்து பெறப்பட்ட வடிவமைப்பினை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது‌.

நாட்டின் 125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனம் முன்னணியில் உள்ள நிலையில் ஹீரோ மற்றும் பஜாஜ் இடையை கடுமையான போட்டிகள் 125சிசி சந்தையில் நிலவி வருகின்றது. குறிப்பாக, தற்பொழுது வந்த எக்ஸ்ட்ரீம் 125R ஆனது 125சிசி சந்தையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாகவும் அதே நேரத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையிலும் இந்த புதிய மாடல் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்ற பல்சர் N பைக்கில் உள்ளதை போன்றே வழக்கமாக இந்த மாடலிலும் இரண்டு வால்வு கொண்ட என்ஜின் பயன்படுத்தப்படும் என்பதனால் அநேகமாக பல்சர் 125 பைக்கில் உள்ள என்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பல்சர் என்எஸ் 125 பைக்கில் 4 வால்வுகளை பெற்ற என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Share
Published by
MR.Durai