பஜாஜின் பிரபலமான பல்சர் பைக் வரிசையில் மூன்றாவது 125சிசி மாடலை பல்சர் N125 என்ற பெயரில் ரூபாய் 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய மாடல் பல்சர் என்125 என அழைக்கப்பட்டாலும் முந்தைய பல்சரின் N பைக்குகளான என்150,என்160 மற்றும் என்250 போல அல்லாமல் மாறுதலான டிசைனை பெற்றிருக்கின்றது.
ஏற்கனவே பல்சர் பிராண்டில் 125சிசி சந்தையில் கிளாசிக் ஸ்டைல் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்கள் உள்ளது.
Bajaj Pulsar N125
ஸ்டைலிசான மற்றும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பல்சர் என் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,500 rpm-யில் 12 பிஎஸ் பவர் மற்றும் 10.8 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேகம் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது.
முழுமையான எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் கருப்பு நிறத்துடன் சிவப்பு, கிரே உடன் சிட்ரஸ் ரஷ், கருப்பு உடன் பர்பிள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி இல்லாத மாடலில் மெட்டாலிக் வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு போன்ற கவர்ச்சிகரமான நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக இந்த மாடலில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்று முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
அடிப்படையாக இந்த மாடலில் LED Disc BT , LED Disc என இரண்டு விதமான வேரியண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் LED Disc BT வேரியண்டில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் உடன் கூடிய மாடலும் மற்றொன்று கனெக்ட்டிவிட்டி இல்லாத மாடலும் வழங்கப்படுகின்றது.
குறிப்பாக 125சிசி செக்மெண்டில் உள்ள பிரபலமான ஹோண்டா எஸ்பி 125, டிவிஎஸ் ரைடர் மற்றும் சமீபத்திய பிரபலமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர மற்ற பல்சர் 125 மாடல்களுடன்,ஃபீரிடம் 125, ஹோண்டா சைன் 125 ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் 125 மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் 125 போன்ற மாடல்களும் உள்ளன.
2024 Bajaj Pulsar N125 image Gallery