பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையின் முதல் மாடலாக உயர் ரக பல்சர் 250F விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது சாலை சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.
புதிய 250எஃப் பைக்கில் முன்பக்க அமைப்பில் எல்இடி ஹெட்லைட் கொண்டிருப்பதுடன் ரன்னிங் விளக்குகள் கண் புருவத்தை போல அமைந்துள்ளது. எல்இடி டர்ன் இன்டிகேட்டர், புதிய வகை ரியர் வியூ மிரர், மேம்பட்ட நவீனத்துவமான டேங்க் டிசைனை கொண்டிருப்பதுடன், கிளீப் ஆன் ஹேண்டில்பார், மிகவும் சவுகரியமான ரைடிங் பொசிஷனை பஜாஜ் ஏற்படுத்தியுள்ளது. டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் எல்இடி விளக்குகளாக அமைந்திருப்பதுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.
இரு பிரிவு இருக்கைகளை கொண்டுள்ள பல்சர் 250F மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றிருக்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்ட 250சிசி இன்ஜின் பெற உள்ள பல்சர் மாடலின் பவர் டொமினார் 250 (27hp/23.5Nm) பைக்கினை விட கூடுதலாகவும் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம்.