ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட ரேஞ்சு கொண்ட 450S, 450X மாடல்களுடன் கூடுதலாக சிறப்பு பதிப்பாக உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாக தெரியும் வகையிலான கண்ணாடி போன்ற பேனல்களை பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்பாக ஏதெர் நிறுவனம் கலெக்டர்ஸ் எடிசன் என்ற பெயரில் இது போன்ற டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை கொண்ட மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.
2024 Ather 450X escooter
சமீபத்தில் வெளியான ஹோமோலோகேஷன் ஆவனங்களின் அடிப்படையில் மேம்பட்ட ஏதெர் 450X HR எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சு 158 கிலோ மீட்டர் வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.
ஏதெர் 450S, 450X (2.9kWh) மற்றும் 450X (3.7kWh) ஆகியற்றின் வரிசையில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து மோட்டார், மெக்கானிக்கல், வடிவமைப்பு, பேட்டரி மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் புதிய மாடல்கள் வரக்கூடும். குறிப்பாக கூடுதல் நிறங்கள் மற்றும் 10 வது ஆண்டு விழா சிறப்பு எடிசன் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம்.
ஏதெர் 450X ஆனது 7-இன்ச் கூகிள்-இயங்கும் டச்ஸ்கிரீன் டேஷ்போர்டில் கூகிள் மேப்ஸ், நேர்த்தியான UI மற்றும் பிறவற்றைக் கொண்ட அம்சங்களை இருக்கும். டூயல் டிஸ்க் பிரேக்குகள், அனைத்தும் எல்இடி விளக்கு, 22லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.
மேலும், ரைடிங் மோடு, ரைடிங் அசிஸ்ட், நேவிகேஷன், ரைடிங் ஸ்டேட்ஸ், ஃபைன்டு மை ஸ்கூட்டர், டோ அலர்ட், அவசகரகால எச்சரிக்கை, OTA மேம்பாடு, ஆட்டோஹோல்ட், அவசர கால பிரேக்கிங் விளக்கு, வாகனம் கீழே விழுந்தால் உடனடியாக மோட்டார் ஆஃப் ஆகும் வசதி ஆகியவற்றை புரோ பேக் மூலம் பல்வேறு வசதிகளை கூடுதலாக பெறலாம்.
அடுத்த சில வாரங்களில் புதிய ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசை அறிமுகம் செய்யப்படலாம்.