இந்திய சந்தையில் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 என்டூரோ ஆர் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் சமூக ஊடங்களில் கேடிஎம் டீசரை வெளியிட்டுள்ளதால் நடப்பு ஏப்ரல் மாத மத்தியில் விற்பனைக்கு ரூ.3.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
KTM 390 Enduro R
390 அட்வென்ச்சர் மாடலை விட மிகவும் அதிகமான ஆஃப் ரோடு சாகசங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள என்டூரோ ரக மாடலிலும் 399சிசி LC4c எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
இந்த டூயல் ஸ்போர்ட் பைக் மாடலில் 90/90-21 மற்றும் 140/80-18 ட்யூப் ஸ்போக் வீல் டயர் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் உள்ள 21 அங்குல வீல் உடன் 230 மிமீ பயணிக்கின்ற முன்புற அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று 285 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.
பின்புறத்தில் 18 அங்குல வீல் உடன் மோனோஷாக் அப்சார்பரை பெற்று 240 மிமீ டிஸ்க் கொண்டுள்ளது.
272மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற கேடிஎம் 390 என்டூரோ ஆர் மாடலில் 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருக்கின்றது.
4.1-இன்ச் கலர் TFT கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
ஒற்றை ஆரஞ்ச் வண்ணத்தில் மட்டும் கிடைக்க உள்ள இந்த மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடு சாகசங்களுடன் நெடுஞ்சாலையிலும் பயணிக்கும் வகையிலான வடிவமைப்பினை கொண்டிருக்கின்றது.