சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட 2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை ரூ. 80,450 முதல் ரூ.90,430 வரை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் VX, ZX மற்றும் ZX+ என மூன்று விதமான வேரியண்ட் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
டெஸ்டினி 125 எஞ்சின் தொடர்ந்து சில மேம்பாடுகளை பெற்று 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-ல் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது.
டிரம் மற்றும் 190மிமீ டிஸ்க் என இரு விதமான வேரியண்டின் அடிப்படையில் பல்வேறு மேம்பாடுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டரின் டாப் மாடலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.
- Destini 125 VX – ₹ 80,450
- Destini 125 ZX – ₹ 89,430
- Destini 125 ZX+ – ₹ 90,430
(ex showroom)