இந்தியாவில் கவாஸாகி வெளியிட்டுள்ள புதிய நின்ஜா ZX-6R சூப்பர் பைக்கின் விலை ரூ.11.09 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லைம் க்ரீன் மற்றும் கிராபைட் கிரே என இரு விதமான நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக வந்துள்ள நின்ஜா ZX-6R மாடலில் 636cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளது.
Kawasaki Ninja ZX-6R
இசட்எக்ஸ்-6ஆர் மாடலில் 636cc, இன்-லைன், நான்கு சிலிண்டர் என்ஜின் 13,000rpm-ல் 129bhp மற்றும் 10,800rpm-ல் 69Nm வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச்லெஸ் அப் ஷிஃப்ட் மற்றும் டவுன் ஷிஃப்ட்களுக்கான க்விக் ஷிஃப்டரைப் பெறுகிறது.
இந்த மாடலில் இடம்பெற்றுள்ள கவாஸாகி டிராக்ஷன் கன்ட்ரோல் (KAWASAKI TRACTION CONTROL) மூலம் மூன்று விதமான செயல்திறன் அமைப்புகளை ரைடர்ஸ் பெறலாம். மோட் 1 மற்றும் மோட் 2 இரண்டின் மூலம் அதிகபட்ச முன்னோக்கி செல்லும் பொழுது ஆசிலிரேஷனுக்கு முன்னுரிமை வழங்குகின்றது. அடுத்து மோட் 3 பயன்படுத்தி குறைந்த டிராக்ஷன் உள்ள சாலைகளில் இலாகுவான சவாரியை உறுதி செய்துகின்றது.
நின்ஜா ZX-6R மாடலில் 4.3 அங்குல டிஜிட்டல் TFT கிளஸ்ட்டர் மூலம் உயர் தொழில்நுட்ப, உயர் தர தோற்றத்தை அளிப்பதுடன் முந்தைய மாடலில் கிடைக்காத கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.
ஷோவா SFF-BP ஃபோர்க். ஷோவா SFF மற்றும் BPF ஆனது முன்புறத்தில் கொடுக்கப்பட்டு மிகசிறப்பான சஸ்பென்ஷனை ரேஸ் டிராக் மற்றும் பொது சாலைகளில் வழங்குவதுடன், கேஸ் சார்ஜடு மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. இரண்டும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும்.
டயர் அளவுகள் முறையே 120/70-ZR17 மற்றும் 180/55-ZR17 முன் மற்றும் பின்புறம், முந்தைய மாடலைப் போலவே இருக்கும்.
கவாஸாகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் உள்ள அலுமினிய பெரிமீட்டர் ஃபிரேம் உடன் பிரேக்கிங் அமைப்பில் நிஸ்சின் மோனோபிளாக் காலிப்பர் முன்பக்கத்தில் உள்ள இரட்டை 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஒரு 220 மிமீ டிஸ்கில் ஒற்றை பாட் காலிபர் உள்ளது.
வரும் ஜனவரி மாதம் இறுதி முதல் டெலிவரி துவங்க உள்ளதாக 2024 கவாஸாகி நின்ஜா ZX-6R பைக் விலை ரூ.11,09,000 ஆகும்.