2025 ஆம் ஆண்டிற்கான புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 மாடல் ரூபாய் 8 லட்சத்து 89 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் டிசைன் மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
900 சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 65 பிஎச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை.
ஸ்பீட் ட்வின் 900 பைக்கின் இருக்கை உயரம் இப்போது 780 மிமீ ( முன்பு765 மிமீ வரை) உயர்ந்தாலும், ஆனால் குறைந்த உயரம் உள்ளவர்களும் இலகுவாக ரைடிங் மேற்கொள்ளும் வகையில் 760 மிமீ இருக்கை ஆக்செரீஸ் ஆக வழங்கப்படுகின்றது. மார்சோச்சியில் இருந்து பெறப்பட்ட அப்சைடு ஃபோர்க் மற்றும் கேஸ்-சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டு புதிய அலுமினிய ஸ்விங்கார்ம் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் உடன் மிச்செலின் ரோடு கிளாசிக் டயர்களுடன் வருகின்றன.
ட்ரையம்ப் புதிய ஸ்பீட் ட்வின் 900 மூன்று வண்ண விருப்பங்களில் வழங்குகிறது. முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், டெலிவரிகள் ஜனவரி 2025க்குள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.