இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
மலேசியாவில் பைக்குகளின் விலை ஸ்பீட் 400 RM 26,900 (ரூ. 4.78 லட்சம்) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X RM 29,900 (ரூ. 5.31 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்குகள் முறையே ரூ.2.33 லட்சம் மற்றும் ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
Triumph Speed 400, Scrambler 400X
ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X என இரு பைக்கிலும் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரைம்யம்ப் கூட்டணியின் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக் மாடலில் போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் மற்றும் காஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்முடன் இணைந்து புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை ஏற்படுத்தும் கையாளுதலுக்கான உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. 790 மிமீ இருக்கை உயரத்துடன், ஸ்பீட் 400 பைக்கின் எடை 170 கிலோ கிராம் ஆக உள்ளது.
ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் 43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 150 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில் 150 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.