ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.25,000 ஹார்லியின் டீலர்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றது.
வரும் ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் 440cc ஏர் ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.
ஹார்லி-டேவிட்சன் X 440
ஹார்லி-ஹீரோ ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் முதல் தயாரிப்பு ஹார்லி-டேவிட்சன் X 440 ரோட்ஸ்டர் ஆகும். வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஹார்லி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
தயாரிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையை ஹீரோ மோட்டோகார்ப் கவனித்துக் கொள்ளும். டீலர்ஷிப் மூலம் முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. 25,000 முன்பணம் செலுத்தி X440 பைக்கினை முன்பதிவு செய்யலாம்.
X440 ஆனது 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.
ட்யூபுலர் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள X 440 பைக்கில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் வீலுடன் எம்ஆர்எஃப் டயரினை பெற்றுள்ளது.
ஜூலை 3, 2023-ல் ஹார்லி-டேவிட்சன் X 440 விலை ரூ.2.50 லட்சம் என அறிவிக்கப்படலாம்.