தாய்வானைச் சேர்ந்த கிம்கோ நிறுவனம், மிகவும் பவர்ஃபுல்லான நேக்டூ ஸ்போர்ட்டிவ் எலெக்ட்ரிக் பைக் மாடலை ரெவோநெக்ஸ் கான்செப்ட் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ரெவோநெக்ஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 205 கிமீ ஆகும்.
கடந்த முறை இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் ஷோவில் காட்சிப்படுத்தபட்ட ஃபேரிங் வெர்ஷன் மாடலான சூப்பர்நெக்ஸ் அடிப்படையிலான நேக்டூ ஸ்டீரிட் மாடலான ரெவோநெக்ஸ் பைக்கின் முழுமையான நுட்பம் மற்றும் மோட்டார், பேட்டரி விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த மின்சார பைக் மிக குறைந்த 3.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறனுடன், 0 கி.மீ வேகத்தில் இருந்து அதன் அதிகபட்ச 205 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரத்திற்கு தொடக்க நிலை டார்க் சிறப்பான முறையில் வழங்க கிம்கோவின் EFA (Electric Full Range Acceleration) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்துகின்றது. மின்சார மோட்டார், பேட்டரி பற்றிய விவரங்களை கிம்கோ வெளியிடவில்லை, ஆனால், ரெவோநெக்ஸ் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸைப் பெறுகிறது.
ரெவோநெக்ஸில் மற்றபடி முக்கியமாக எல்இடி ஆதரவு பெற்ற முன் மற்றும் டெயில் விளக்குகள், டி.எஃப்.டி இண்ஸ்டூர்மெண்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு அம்சம், முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் இரட்டை டிஸ்க் கொண்ட பிரெம்போ காலிப்பர், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் மற்றும் டிஸ்க் பிரேக், மற்றும் செயற்கை முறையில் ஒலி எழுப்பும் வசதியை பெற உள்ளது.
பாய்ஸ்டு, அக்ஸ்ரேட்டிவ், போல்டு மற்றும் எக்ஸ்ட்ரீம் என நான்கு விதமான சவாரி முறைகள் கொண்டுள்ள கிம்கோ ரெவோநெக்ஸ் பைக் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம். இந்திய சந்தையில் முன்பே கிம்கோ நிறுவனம் 22 மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 22கிம்கோ என்ற பெயரில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.