அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள கேடிஎம் RC 125 பைக்கின் டீசர் வெளியானதை தொடர்ந்து டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் கேடிஎம் 125 டியூக் நேக்டூ வெர்ஷனை அடிப்படையாக கொண்டதாக விளங்கும்.
இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் ரக பைக் சந்தையில் பிரபலமாக விளங்கும் கேடிஎம் நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட ஃபேரிங் ரக மாடலாக கேடிஎம் ஆர்சி 125 மாடல் விளங்க உள்ளது.
கேடிஎம் RC 125 எதிர்பார்ப்புகள்
கடந்த நவம்பர் 2018-ல் விற்பனைக்கு வெளியான நேக்டூ ஸ்டைல் 125 டியூக் மாடலின் பின்னணியாக வடிவமைக்கப்பட உள்ள ஆர்சி 125 மாடல் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் ஸ்டைலிஷான தோற்ற வடிவமைப்பினை வெளிப்படுத்துவதாக விளங்கும்.
RC 125 மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 15 bhp ஆற்றல் 9,500rpm மற்றும் 11.8Nm டார்க் கொண்டதாக இருக்கின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் பின்புற டயரில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆர்சி 125 மாடலுக்கு இணையாகவே விற்பனைக்கு வெளியாக உள்ள இந்த பைக்கின் டீசரை ட்விட்டர் பக்கத்தில் கேடிஎம் வெளியிட்டுள்ளது. இந்தியளவில் கேடிஎம் டீலர்களிடம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள கேடிஎம் ஆர்சி 125 பைக்கிற்கு ரூ.5000 வசூலிக்கப்படுகின்றது. விற்பனைக்கு வெளியாக உள்ள தேதி விபரம் தற்போது வரை வெளியாகவில்லை. ஜூலை மாதம் மத்தியில் டெலிவரி தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
125 டியூக் மாடல் ரூ.1.30 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஃபேரிங் செய்யப்பட்ட ஆர்சி 125 விலை ரூ.1.45 என விற்பனையக விலை தொடங்கலாம்.