இந்தியாவில் கேடிஎம் சூப்பர்ஸ்போர்ட் பிரிவில், குறைவான விலை பெற்ற கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் ஃபேரிங் ரக மாடலான ஆர்சி 125 மாடல் முன்பு விற்பனையில் உள்ள நேக்டூ கேடிஎம் 125 டியூக் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.
ரூபாய் 1.47 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கேடிஎம் RC 125 பைக் மாடலில் மிக நேர்த்தியான முறையில் ஃபேரிங் செய்யப்பட்டு ஸ்டைலிஷான இரண்டு புதிய நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஜூன் மாத இறுதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.
கேடிஎம் RC 125 விலை
இந்திய சந்தையில் விற்பனை அதிகரித்து வரும் குறைந்த விலை ஸ்போர்டிவ் ரக மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் கேடிஎம் நிறுவனத்தின் மோட்டோ ஜிபி ஸ்போர்ட்டிவ் RC16 பாரம்பரியத்திலிருந்து ஆர்சி 125 வெளியாகியுள்ளது.
RC 125 மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 14.2 bhp ஆற்றல் 9,500rpm மற்றும் 11.8 Nm டார்க் கொண்டதாக இருக்கின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் பின்புற டயரில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்புற டயரில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் இன்வெர்டேட் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 10 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. 154.2 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவன நேக்டு வெர்ஷன் 125 டியூக் மாடல் ரூ.1.30 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஃபேரிங் செய்யப்பட்ட கேடிஎம் RC 125 விலை ரூ.1.47 லட்சம் என டெல்லி விற்பனையக விலை தொடங்குகின்றது. நாடு முழுவதும் உள்ள 470 கேடிஎம் டீலர்களிடமும் ஜூன் முதல் டெலிவரிக்கு கிடைக்க உள்ளது.