கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் மாடல் பிஎஸ்-6 இன்ஜின் பெற்று எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு மாற்றங்களுடன் வந்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.4,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
250 டியூக் மாடல் தனது 390 டியூக் பைக்கிலிருந்து பெரும்பாலான உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக இரண்டு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி டி.ஆர்.எல் கொண்டுள்ளது.
250 டியூக் மாடலில் உள்ள 248.8 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 30 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 24 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் 13.4 லிட்டர் கொள்ளளவுடன், போஷ் நிறுவன 9.1 எம்பி டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது. 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ டிஸ்க்குடன் இடம்பெறுகிறது. இந்த பைக்கின் எடை 150 கிலோ கிராம் மட்டும், இருக்கை உயரம் 830 மி.மீ., கிரவுண்ட் கிளியரண்ஸ் 185 மி.மீ ஆக உள்ளது.
புதிய கேடிஎம் 250 டியூக் விலை ரூ.2.09 லட்சம் ஆகும்.