இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் பல்வேறு பிரீமியம் பைக்குகள் மற்றும் எண்டூரா, மோட்டோகிராஸ் மற்றும் சிறுவர்களுக்கு என ஆறு விதமான டர்ட் ரூ.4.75 லட்சம் முதல் ரூ. 12.96 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 50சிசி முதல் 450சிசி வரையிலான எஞ்சின் பிரிவில் கிடைக்க உள்ளது.
KTM 50 SX, KTM 65 SX மற்றும் KTM 85 SX என மூன்று மாடல்களும் இரண்டு ஸ்ட்ரோக் பெற்ற 50சிசி பைக்குகளாகும். இவை சிறுவர்களுக்கு ஏற்ற ஆஃப் ரோடு பிரிவில் வந்துள்ளது.
ரூ.4.75 லட்சம் விலையில் KTM 50 SX மாடலில் ஒற்றை சிலிண்டர் 49.9cc இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டு 5.4bhp மற்றும் 5.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஒற்றை கியர் தானியங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.5.47 KTM 65 X பைக்கில் 64.9cc சிங்கிள்-சிலிண்டர் டூ-ஸ்ட்ரோக் எஞ்சினை பெற்று 10.6bhp பவரை வழங்கி ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.6.69 லட்சத்தில் KTM 85 SX ஆனது 16.4bhp மற்றும் 14Nm வழங்கும் 84.9cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.9.98 லட்சத்தில் KTM 250 SX-F வந்துள்ள சக்திவாய்ந்த 249.9cc நான்கு ஸ்ட்ரோக் எஞ்சினை பெற்று 13,900rpm-ல் 46.8hp மற்றும் 9,500rpm-ல் 26.5Nm. இதன் எடை 104 கிலோ கொண்டது.
ரூ.10.25 லட்சத்தில் KTM 450 SX-F பைக்கில் 449.9cc நான்கு-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டரைப் பயன்படுத்தி 9,500rpm-ல் 63hp மற்றும் 9500rpm-ல் 74Nm டார்க் வழங்குகின்றது.
என்டூரா வகை KTM 350 EXC-F மாடல் ரூ.12.96 லட்சத்தில் 9500 ஆர்பிஎம்மில் 45 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 349.7சிசி நான்கு ஸ்ட்ரோக் எஞ்சினுடன் இயங்குகிறது.
இந்த மாடல்கள் அனைத்தும் டிராக் அல்லத மூடப்பட்ட சாலைகளில் மட்டும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளை வாங்க நேரடியாக கேடிஎம் இணையதளத்தை பயன்படுத்தலாம்.