வரும் அக்டோபரில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா என இரு பைக் நிறுவனங்களும் ஹஸ்க்வர்னா 401 விட்பிலன் மற்றும் ஸ்வார்ட்பிலன், கேடிஎம் 250 அட்வென்ச்சர், ஆர்சி125 மற்றும் ஆர்சி200 மாடல்களில் புதிய நிறங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஹஸ்க்வர்னா 401
ஹஸ்க்வர்னா நிறுவனம் முன்பாக இந்திய சந்தையில் கஃபே ரேசர் ஸ்டைலை விட்பிலன் 250 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 250 பைக் பெறுவதுடன் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கேடிஎம் 390 டியூக் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற 373.3 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 ஆர்.பி.எம்-ல் 43.5 ஹெச்பி பவர் மற்றும் 7,000 ஆர்.பி.எம்-ல் 36 என்எம் டார்க் வெளிப்படுத்தும் இன்ஜினை ஹஸ்க்வர்னா 401 மாடல்கள் பெற உள்ளது.
முன்பாக விற்பனையில் உள்ள மாடல்களை போலவே விட்பிலன் மற்றும் ஸ்வார்ட்பிலன் 401 தோற்ற அமைப்பு மற்றும் வசதிகள் அமைந்திருக்கும். நிறங்கள் மற்றும் சில வசதிகள் மேம்பட்டதாக இருக்கலாம்.
அனேகமாக விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் 390 டியூக் பைக்கின் விலை ரூ.2.58 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைப்பதனால், இந்த மாடல்களின் விலை இதனை சார்ந்தே அமைந்திருக்கலாம்.
கேடிஎம் 250 அட்வென்ச்சர்
இந்தியாவில் முன்பாக விற்பனை செய்யப்படுகின்ற 390 அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு இன்ஜின் மட்டும் 250 டியூக்கிலிருந்து பெறப்பட்ட 248.8 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 30 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 24 என்எம் டார்க் வழங்கும்.
முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை பெற்று ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டிருக்கும். பிரேக்குகளில் முன்புறத்தில் ரேடியல் காலிபருடன் கூடிய 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்றிருக்கும்.
மற்றபடி டேங்க் அமைப்பு, ஸ்பிளிட் ஹெட்லைட் போன்றவற்றுடன் டிஎஃப்டி டிஸ்பிளே கொண்டதாக வரவுள்ள மாடலின் விலை ரூ.2.20 லட்சத்திற்குள் அமையலாம்.
கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200
கேடிஎம் நிறுவனத்தின் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல்களான ஆர்சி 125 மற்றும் ஆர்சி 200 பைக்குகளில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்களை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது.
ஆர்சி 125 பைக்கில் ஒற்றை சிலிண்டர் என்ஜின் 9,250 ஆர்.பி.எம்-ல் 14.5 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் 12 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
ஆர்சி 200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 25 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் 19.2 என்எம் டார்க் வெளியிடுகின்றது.
செப்டம்பர் மாத இறுதி முதல் அக்டோபர் மாதத்திற்குள் ஹஸ்க்வர்னா விட்பிலன் 401 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 401, கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் ஆர்சி 125, ஆர்சி 200 பைக்குகள் வெளியிடப்பட உள்ளது.
உதவி – moneycontrol.com