Categories: Bike News

முதல்முறையாக கேடிஎம் 790 டியூக் ஸ்பை படம் இந்தியாவில் வெளியானது

fcb8d ktm 790 duke

ஸ்போர்ட்டிவ் மற்றும் மிகுந்த பவரை வழங்குகின்ற கேடிஎம் 790 டியூக் இந்திய டீலர்களுக்கு வந்துள்ள படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. டியூக் 790 பைக்கின் விலை ரூ. 7.80 லட்சத்தில் தொடங்கலாம்.

கேடிஎம் டியூக் 790

பஜாஜ் நிறுவனத்தின் அங்கமான கேடிஎம் மிக சிறப்பான செயல்திறன் மிக்க ஸ்போர்ட்டிவ் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.

WP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

image source – maxabout.com

சில முன்னணி நகரங்களில் உள்ள டீலர்கள் வாயிலாக டியூக் 790 பைக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. ரூ.30,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மெக்கானிக் சார்ந்த பயற்சியில் எடுக்கப்பட்ட படத்தை மேக்ஸ் அபோட் தளம் வெளியிட்டுள்ளது.

Share
Published by
MR.Durai