இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள கேடிஎம் 790 டியூக் பைக்கின் 100 யூனிட்டுகளில் 41 யூனிட்டுகள் வெளியான 10 நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை பெற்ற மாடல் 100 யூனிட்டுகள் மட்டும் கிடைக்க உள்ளது. இந்த பைக் தற்பொழுது சிகேடி முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.
790 மாடலில் பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.
WP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
கேடிஎம் 790 டியூக் பைக் விலை ரூ.8.64 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)