கேடிஎம் சூப்பர் பைக் தயாரிப்பாளரின் மற்றொரு அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலாக 250 அட்வென்ச்சர் பைக்கினை ரூ.2,48,256 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் நாடு முழுவதும் உள்ள கேடிஎம் டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி விரைவில் வழங்கப்பட உள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள 250 அட்வென்ச்சர் மாடலில் பல்வேறு 250 டியூக் மாடலில் இடம்பெற்றுள்ள 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
250 அட்வென்ச்சரில் 855 மிமீ இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாகவும் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கினை பெற்றுள்ளது.
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு முன்புற டயரில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டு சுவிட்சபிள் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது. 19 அங்குல முன்புற வீல் மற்றும் 17 அங்குல பின்புறம் என இரண்டு ஹெவி டூட்டி கேஸ்ட் வீல் அனைத்து சாலைக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு கேடிஎம் நிறுவனம், ரேடியேட்டர் புராடெக்ஷன் கிரில், ஜிபிஎஸ் பிராக்கெட்ஸ், ஹெட்லைட் பாதுகாப்பு மற்றும் ஹேண்டில் பார் பாதுகாப்பு என பல்வேறு ஆக்செரீஸ்களை வழங்குகின்றது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
web title: KTM 250 Adventure launched price at rs. 248,256