- இலூனா விலை இ-காமர்ஸ் தளங்களில் ரூ.71,990-ரூ.74,990
- 96 கிலோ கொண்ட மொபெட் 110 கிமீ ரேஞ்ச் வழங்கும்.
- முன்பதிவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது.
ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மொபெட் லூனா மாடலை மீண்டும் விற்பனைக்கு கைனெடிக் கீரீன் நிறுவனம் இலூனா (Kinetic E-Luna) எலெக்ட்ரிக் மெபெட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முன்னணி இ-காம்ர்ஸ் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி ரூ.71,990-ரூ.74,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சந்தையில் கிடைக்கின்ற ஒரு சில மொபெட் எலக்ட்ரிக் மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வந்துள்ள இ-லூனா மாடலில் 2kWh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 110km ரேஞ்ச் கிடைக்கும். E-Luna மாடலின் மோட்டார் பவர் 2kW மற்றும் அதிகபட்சமாக 50-52kmph வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது.
போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படும் நிலையில் 2kWh பேட்டரியை சார்ஜிங் நேரம் 4 மணிநேரம் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பேட்டரி நிலை மற்றும் பிற முக்கிய விவரங்களுக்கு எல்சிடி டிஜிட்டல் கன்சோலுடன் வந்துள்ள மாடலில் பின்புற இருக்கை நீக்கக்கூடியதாக உள்ளதால் சுமைகளை எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பைக்கின் எடை வெறும் 96 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் வெறும் 760 மிமீ ஆகும்.
ஒசன் ப்ளூ, முல்பெர்ரி ரெட் என இரு நிறங்களை பெற்றுள்ள கைனெட்டிக் இ-லூனா எலக்ட்ரிக் மெபெட்டில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புற இரட்டை ஷாக் அப்சார்பருடன், பிரேக்குகளில் டிரம் பிரேக் கொண்டு 16 இன்ச் ஸ்போக் வீல் டியூப் டைப் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
தற்பொழுது அதிகாரப்பூர்வ கைனெட்டிக் க்ரீன் இணையதளத்தில் ரூ.500 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அமேசான், ஃபிளிப்கார்ட் தளங்களில் கிடைக்கின்றது.