பெட்ரோலில் பிரசத்தி பெற்ற மொபெட் தற்பொழுது பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மாடலாக வெளியான கைனெட்டிக் இ-லூனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
1970 களில் வெளியான லூனா கைனெட்டிக் நிறுவனத்திற்கு பிரபலமான மாடலாகவும், இந்திய அளவில் லட்சகணக்கான வாடிக்கையளர்களை கொண்டிருந்தது. மீண்டும் அடிப்படையான டிசைனை கொண்டு எலக்ட்ரிக் வெர்ஷனாக உருவெடுத்துள்ளது.
இ-லூனா டிசைன்
பழைய மொபெட் மாடலின் அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டுள்ள இ-லூனாவில் வட்ட வடிவ ஹாலஜென் ஹெட்லைட் வழங்கப்பட்டு, முன்புறத்தில் சுமைகளை வைப்பதற்காக இடவசதி, இரு பிரிவுகளை பெற்ற இருக்கையில், பின்புற இருக்கையை நீக்கிவிட்டு சுமையை எடுத்துச் செல்ல ஏதுவாகவும் உள்ளது.
லூனாவில் முல்பெரி சிவப்பு, கடற் நீலம், முத்து மஞ்சள், பளபளப்பான பச்சை மற்றும் நைட் ஸ்டார் கருப்பு என 5 விதமான வண்ண நிறங்களில் கிடைக்கின்றது.
இ-லூனா பேட்டரி மற்றும் ரேஞ்ச்
2kWh Li Ion NMC பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையாக சிங்கிள் சார்ஜில் 110km ரேஞ்ச் கிடைக்கும் என இந்நிறுனம் குறிப்பிட்டுள்ளது. உண்மையான ரேஞ்ச் 80-85 கிமீ கிடைக்கலாம். இந்த மாடலில் ஈக்கோ, சிட்டி, ஸ்பீடு மற்றும் ஸ்போர்ட் என நான்கு விதமான மோடுகளை கொண்டுள்ளது.
E-Luna மாடலில் உள்ள BLDC மோட்டார் பவர் 1.2kW மற்றும் அதிகபட்சமாக 50kmph வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது. சாதாரனமாக வீடுகளில் உள்ள 220V, 15A, 3 பின் போர்ட்டபிள் சார்ஜர் மூலம் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகின்றது.
மெக்கானிக்கல் அம்சங்கள்
ட்யூப்லெர் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்ட இ-லூனாவின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பருடன், இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் 2.50 -16 அங்குல ஸ்போக்டூ வீல் கொடுக்கப்பட்டு டியூப் டயருடன் 96 கிலோ எடை கொண்ட மாடலில் 150 கிலோ எடையை எடுத்துச் செல்ல இயலும். இருக்கை உயரம் 760 மிமீ ஆகவும், வீல்பேஸ் 1,335 மிமீ மற்றும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது.
இ-லூனாவின வசதிகள்
ஸ்பீடோமீட்டர், பேட்டரி சார்ஜ் நிலை, சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களைக் காட்டுகின்ற அடிப்படையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லீவர் லாக், மற்றும் USB சார்ஜிங் பாயிண்ட் மற்றும் பைகளை மாட்டுவதற்கான கொக்கியும் எலக்ட்ரிக் லூனாவில் உள்ளது.
கைனெட்டிக் இ-லூனா விலை
தற்பொழுது ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெறுகிற நிலையில் விற்பனைக்கு இந்நிறுவன டீலர்கள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கின்றது.
Kinetic E-Luna prices
- E-Luna X1 – ₹ 69,990
- E-Luna X2 – ₹ 74,990
மேலே வழங்கப்பட்டுள்ள எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் கருப்பு நிறத்துக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நான்கு நிறங்களுக்கு கூடுதலாக ரூ.1,500 வசூலிக்கப்படுவதனால் விலை ரூ.71,490 முதல் ரூ.76,490 ஆக உள்ளது. எனவே, ஆன் ரோடு விலை 78,000 முதல் ரூ.84,000 வரை தோராயமாக அமைந்திருக்கலாம்.
இந்தியாவில் கிடைக்கின்ற டிவிஎஸ் XL100, ஓசோடெக் பீம், மற்றும் ஓகினாவா டூயல் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.