டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள IBW 2023 அரங்கில் புதிய கவாஸாகி W800 பைக்கினை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது W175 பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.
10வது ஆண்டாக நடைபெற உள்ள இந்தியன் பைக் வாரத்தில் பல்வேறு புதிய கஸ்டமைஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தவிர ஒரு சில புதிய மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளது.
2024 Kawasaki W800
கவாஸாகி வெளியிட்டுள்ள டீசரில் 1965 ஆம் ஆண்டை குறிப்பிட்டு W சீரிஸ் மாடலை உறுதிப்படுத்தியுள்ளதால் ஏற்கனவே W175 இந்தியாவில் கிடைக்கின்ற நிலையில் பிரீமியம் சந்தையில் உள்ள W800 மாடல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
773cc ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 52PS பவரை 6,500rpm-ல் மற்றும் 62Nm டார்க் 4,800rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
W800 பைக்கின் முன்புறத்தில் 100/90-19M/C 57H மற்றும் பின்புறத்தில் 130/80-18M/C 66H கொடுக்கப்பட்டு 320mm டிஸ்க் பிரேக்குடன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் 270mm டிஸ்க் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
2024 கவாஸாகி W800 பைக் மாடல் 2023 இந்தியன் பைக் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.