EICMA 2023 மோட்டார் ஷோ அரங்கில் கவாஸாகி நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டு பைக் மாடல்களில் லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால் என்ஜின் தொடர்பான நுட்பவிபரங்களை வெளியிடவில்லை.
எலிமினேட்டர் 500 மாடலில் உள்ள அதே 451cc என்ஜினை இரு மாடல்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
Kawasaki Ninja 500 & Z 500
நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டிலும் பொதுவாக 451cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 45.4hp பவரை 9000rpm-லும் 42.6Nm டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. மிக சிறப்பான வகையில் மேம்பட்ட டார்க் செயல்திறனை வெளிப்படுத்தலாம்.
டெர்லிஸ் ஃபிரேம் கொண்ட இரு மாடல்களிலும் அடிப்படையான வேரியண்டில் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. டாப் வேரியண்டில் SE மாடலில் புளூடூத் இணைப்புடன் பொருத்தப்பட்ட TFT டிஸ்ப்ளே மற்றும் USB-C சார்ஜிங் போர்ட் மற்றும் கீலெஸ் வசதி போன்றவற்றைக் கொண்டுள்ளது.
ஃபேரிங் ரக நிஞ்சா 500 பைக்கில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் செட்டப் கொடுக்கப்பட்டு மிக ஸ்போர்ட்டிவான தோற்றத்தை பிரீமியம் நிஞ்ஜா ZX-6R பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளது. நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டராக இசட் 500 விளங்குகின்றது.
இந்திய சந்தையில் கவாஸாகி நிஞ்ஜா 500, மற்றும் Z500 பைக்குகள் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும்.