பொது போக்குவரத்து சாலைகளிலும், ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற KLX 230 மாடலை கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலைப் பற்றி முழுமையான விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் ஏற்கனவே பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. அவையெல்லாம் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படாமல் குறிப்பிட்ட மூடப்பட்ட டிராக்குளில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.
கேஎல்எக்ஸ் 230 மோட்டார்சைக்கிளில் 2-வால்வுகளுடன், 233cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
லைம் க்ரீன் மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்று முன்பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டு 240 மிமீ பயணிக்கும் அளவுடன் 21 அங்குல டயரில் 265 மிமீ டிஸ்க், பின்புறத்தில் 250 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு 18 அங்குல டயருடன் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
139 கிலோ மட்டும் எடை கொண்டுள்ள KLX 230 பைக்கினை மிக இலகுவாக அனைத்து சாலைகளிலும் பயன்படுத்த 265 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் சிறப்பான வகையில் இயக்க 880 மிமீ இருக்கை உயரம் பெற்று அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையாக உள்ளது.
எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு எல்சிடி கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் வந்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள KLX 230 ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரண்டிலும் பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக இருக்கின்றது. மேலும், இந்த மாடல் நேரடியாக குறைவான விலையில் கிடைக்கின்ற அட்வென்ச்சர் ஆக மாடலான ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் தவிர ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்ச்சர், மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற மாடல்களையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த மாடல் இந்திய சந்தைக்கு வரும் பொழுது பாகங்களை தெரிவித்து ஒருங்கிணைக்க மட்டுமே நிறுவனம் முடிவு செய்துள்ளதால் விலை சற்று கூடுதலாக ரூபாய் 2.50 லட்சம் முதல் ரூபாய் 3 லட்சத்திற்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்பொழுது ரூ.5,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.