2023 இந்தியா பைக் வாரத்தில் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்ற புதிய கவாஸாகி W175 பைக்கின் விலை அறிமுக சலுகையாக ரூ.1.35 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது.
புதிய W175 பைக்கில் அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்போக் வீல் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Kawasaki W175 Street
177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 13hp பவர் மற்றும் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. டபூள் கார்டிள் ஃபிரேம் அடிப்படையில் முன்புறத்தில் 245 mm டிஸ்க் பிரேக் உடன் 80/100 -17M/C (46P) மற்றும் பின்புறத்தில் 100/90 -17M/C (55P) டிரம் பிரேக் உள்ளது.
W175 ஸ்டீரிட் மாடல் விற்பனையில் உள்ள W175 பைக்கிலிருந்து சிறிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. W175 மாடல் கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ ஆனால் புதிய மாடல் 152 மிமீ மட்டுமே பெற்றுள்ளது. இருக்கை உயரம் 786.5 மிமீ (790 மிமீ உடன் ஒப்பிடும்போது) சற்று குறைவாகவும், 245 மிமீ முன் டிஸ்க் (270 மிமீ W175) பிரேக்கைப் பெறுகிறது
கவாஸாகி W175 ஸ்டீரிட் வேரியண்டில் கிரீன் மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.13,000 – ரூ.15,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.