ஜாவா பைக் என்ஜின்
இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.
கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
சமீபத்தில் புனே, பெங்களூரு நகரங்களில் டீலர்களை திறந்துள்ள இந்நிறுவனம் விரைவில் பல்வேறு முன்னணி நகரங்களில் டீலர்களை அமைக்க உள்ளது. ஆன்லைன் மற்றும் திறக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக அதிகப்படியான முன்பதிவுகளை ஜாவா பெற்று வருகின்றது. எனவே ஜாவா டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் டெலிவரி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்
ஜாவா – ரூ. 1.64 லட்சம்
ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)
(டெல்லி விற்பனையக விலை)
Jawa and Jawa Forty Two Image Gallery