1929 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 500 OHV மாடலை நினைவுப்படுத்தும் வகையில் 90ஆம் ஆண்டு ஜாவா பைக் சிறப்பு மாடலை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு மாடல் 90 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.
வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுமே ஜாவா ஸ்பெஷல் எடிஷன் பைக்கினை பெற தகுதியுடைவர்களாகும். முன்புதிவு செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 90 பயனாளர்களுக்கு மட்டும் விரைவாக இந்த மாடலை வழங்க உள்ளது. அனேகமாக இந்நிறுவனத்தின் முதல் வருட கொண்டாட்டம் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகின்றது. அந்த நாளில் விநியோகம் செய்யப்படலாம்.
சிவப்பு மற்றும் ஐவரி வண்ண திட்டத்தில் வந்துள்ள ஸ்பெஷல் எடிஷனில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாடலுக்கும் வரிசையான எண் 90 வரை டேங்கில் வழங்கப்பட்டிருக்கும். இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.
ஜாவா ஸ்பெஷல் எடிஷன் ரூ. 1.74 லட்சம் (Dual Channel ABS)