இந்திய சந்தையில் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் வந்துள்ள ஜாவா 350 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் 350, ஹோண்டா சிபி 350 ,ஹெனெஸ் சிபி 350 ஆகியவை நேரடியாக எதிர்கொள்ளுகின்றன.
ரெட்ரோ ஸ்டைல், நீண்ட ஜாவா பாரம்பரியம் ஆகியவற்றை பெற்றுள்ள புதிய 350 பைக்கில் 334சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Jawa 350 vs RE Classic 350 Vs Bullet 350 Vs Honda CB 350
முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட சேஸ் மற்றும் என்ஜின் என பல்வேறு மாறுதல்களை கொண்டதாக வந்துள்ள புதிய ஜாவா 350 பைக்கில் ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று 22.57 ps பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடல்களிலும் பொதுவாக ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுதத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350 என இரண்டும் ரெட்ரோ ஸ்டைலை பெற்று சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நான்கு பைக் மாடல்களில் லிக்யூடு கூல்டு என்ஜின் மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் போன்றவற்றுடன் கூடுதல் பவர் ஜாவா 350 பைக் வெளிப்படுத்துவதனால் முன்னிலை வகிக்கின்றது.
அடிப்படையாக ஜாவா 350, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் 350, ஹோண்டா சிபி 350 ,ஹெனெஸ் சிபி 350 என நான்கு பைக்குகளும் ரெட்ரோ ஸ்டைலை பெற்று அடிப்படையான பிரேக்கிங் அம்சங்களில் டிஸ்க் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றும், ஒரு சில வேரியண்டுகளில் டிரம் பிரேக் ஆப்ஷனை ராயல் என்ஃபீலடு மாடல்கள் பெறுகின்றன. கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹோண்டா பெறுகின்றன.
ஜாவா 350 பைக் Vs போட்டியாளர்கள் ஆன் ரோடு விலை ஒப்பீடு
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
Jawa 350 | ₹ 2,15,436 | ₹ 2,56,790 |
RE Classic 350 | ₹ 1,93,080 – ₹ 2,24,755 | ₹ 2,29,065 – ₹ 2,65,712 |
RE Bullet 350 | ₹ 1,73,550 – ₹ 2,15,801 | ₹ 2,08,189 – ₹ 2.57,090 |
Honda CB350 | ₹ 2,15,622 – ₹ 2,18,622 | ₹ 2,57,006 – ₹ 2,61,675 |
Honda Hness CB350 | ₹ 2,10,679 – ₹ 2,17,178 | ₹ 2,26,456 – ₹ 2,59,670 |
தமிழ்நாட்டின் வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.