அமெரிக்காவின் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய இந்தியன் சேலஞ்சர் க்ரூஸர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேக்கர் பாணி டூரிங் மோட்டார் சைக்கிள் மிகப்பெரிய மாடலாக காட்சியளிக்கின்றது.
விற்பனையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் ரோட் கிளைட் மாடலுக்கு போட்டியாக அமைதுள்ள இந்த சேலஞ்சர் பைக்கில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய முன் விளக்குகள், மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ள ஃபேரிங் பேனல்கள், சொகுசு தன்மையை வழங்குகின்ற நீண்ட தொலைவு பயண இருக்கைகளுடன், 68 லிட்டர் கொள்ளளவு பெற்ற இரண்டு சேடில் பேக்குகள், 7.0 அங்குல டிஸ்பிளே கொண்டு நேவிகேஷன் உட்பட ப்ளூடுத் இணைப்பு மூலம் பல்வேறு ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.
இந்தியன் சேலஞ்சரை இயக்குவது 1769 சிசி 60 டிகிரி வி ட்வின் திரவ குளிரூட்டப்பட்ட என்ஜின் அதிகபட்சமாக 122 ஹெச்பி பவர் மற்றும் டார்க் 178 என்எம் வழங்குகின்றது. சிலிப் அசிஸ்ட் கிளட்ச் ஆதரவுடன் 6 வேக கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ரெயின், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
சேலஞ்சர் பைக் ஸ்டாண்டர்ட், டார்க் ஹார்ஸ் மற்றும் லிமிடெட் ஆகிய மூன்று வேரியண்டுகளில் கிடைக்கிறது. தண்டர் பிளாக் ஸ்மோக், சாண்ட்ஸ்டோன் ஸ்மோக் மற்றும் ஒயிட் ஸ்மோக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் டார்க் ஹார்ஸ் கிடைக்கிறது. லிமிடெட் பதிப்பு தண்டர் பிளாக் பேர்ல், டீப்வாட்டர் மெட்டாலிக் மற்றும் ரூபி மெட்டாலிக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் இதியன் சேலஞ்சர் பைக் விற்பனைக்கு வரக்கூடும்.