கேடிஎம் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள ஹுஸஃவர்ணா நிறுவனம், தனது புதிய தயாரிப்பான மூன்று மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டு EICMA ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளது. ஸ்வார்ட்டிபிலென் 701, விட்ச்பிலென் 701 ஏரோ மற்றும் EE5 என்ற பெயர் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களில் EE என்பது எலக்ட்ரிக் இன்ஜின் கொண்டவையாகும்.
ஹுஸஃவர்ணா ஸ்வார்ட்டிபிலென் 701 மோட்டார் சைக்கிள்கள் 692.7cc சிங்கிள் சிலிண்டர், லிக்யுட் கூல்டு இன்ஜின்களுடன் கேடிஎம் 690 டியூக் போன்று இருக்கும். மேலும் இந்த இன்ஜின்கள் 74.78PS ஆற்றலுடன், உச்சபட்ச டார்க்யூவில் 72Nm கொண்டதாக இருக்கும். மேலும் இதில் ரைடு-வயர் திரட்டல், சிலிப்பர் கிளட்ச் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிளின் முன்புற வீல்களில் 43mm WP USD போர்க் மற்றும் பின்புறத்தில் WP மோனோஷாக் யூனிட் கொண்டதாக இருக்கும். மேலும் முன்புற வீல்களில் 320mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற வீல்களில் 240mm சிங்கிள் டிஸ்க்களுடன் இருக்கும். இவை ABS-ஆக மாற்றவும் முடியும்.
ஹுஸஃவர்ணா விட்ச்பிலென் 701 ஏரோ மோட்டார் சைக்கிள்கள் ரெட்ரோ லூக்கில் வெளியாகியுள்ளது. இந்த டிசைன் கபே ரேசர் போன்று இருக்கும். கிளிப்-ஆன் ஹாண்டில்பேர்கள் மற்றும் சிங்கள் சேடல் சீட் மற்றும் சிலிக் லூக்கில் பின்புறமும் இடம் பெற்றுள்ளது. விட்ச்பிலென் 701 போன்று 692.7cc இன்ஜின்கள பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக EE5, இளைய தலைமுறையினருக்காக கொண்டு வரப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் 5PS ஆற்றலில் இயங்கும். 45 நிமிடங்களில் 70 சதவிகித சார்ஜ் ஆகும் இந்த மோட்டார் சைக்கிள்களை 2 மணி நேரம் இயக்க முடியும். இதில் WP சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளதோடு, ஆறு ரைடிங் மோடுகள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு எதையும் ஹுஸஃவர்ணா நிறுவனம் வெளியிடவில்லை.