புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் புதிய என்ஜின் பெற்ற MY2024 ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 பைக் விற்பனைக்கு ரூ.2.92 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர விட்பேன் 250 பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 டியூக் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஸ்வார்ட்பிளேன் 401 மாடல் அதிகபட்சமாக 46 bhp பவரை வெளிப்படுத்துகின்றது.
2024 Husqvarna Svartpilen 401
நவீனத்துவமான முறையில் ரெட்ரோ ஸ்டைலை பெற்று விளங்குகின்ற ஹஸ்குவர்னா Svartpilen 401 பைக் மாடலில் புதிய 398.6cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொஒருத்தப்பட்டு அதிகபட்சமாக 46 bhp பவர் மற்றும் 39 Nm டார்க் வழங்குகின்றது. கூடுதலாக ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைந்த 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் மாடலில் கூடுதலாக ரைடு பை வயர், டிராக்ஷன் கண்ட்ரோல், சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பதற்கு ஏற்ற வகையில் ஐந்து இன்ச் TFT கிளஸ்ட்டர் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
புதிய 2024 ஸ்வார்ட்பிளேன் 401 பைக் மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் WP அபெக்ஸ் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பெற்று இரண்டுமே அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்து, பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் கொண்டு இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 110/70 முன்புற டயர் மற்றும் பின்புறத்தில் 150/60 அளவுகளில் பைரெல்லி பிளாக் பேட்டர்ன் டயர் ஆனது 17-இன்ச் ஸ்போக் வீல் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்ற ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளே 401 பைக்கின் எடை 171.2 கிலோ ஆகும். மிகவும் ஸ்போர்ட்டியான முரட்டுத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
2024 Husqvarna Svartpilen 401 ₹ 2,92,000
2024 Husqvarna Vitpilen 250 ₹ 2,19,000
(Exshowroom Delhi)