2018 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த எக்ஸ்-பிளேடு பைக்கினை நீக்கியுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் காரணமாக எக்ஸ்பிளேடு விடுவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்பிளேடு போதிய வரவேற்பின்மையால் சந்தையில் குறைந்த எண்ணிக்கை மட்டும் பதிவு செய்து வந்தது.. இந்த மாடல் யூனிகார்ன் 160 மற்றும் புதிதாக வந்த எஸ்பி 160 ஆகியவை ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டுள்ளன.
Honda XBlade Discontinued
புதிதாக விற்பனைக்கு வந்த எஸ்பி 160 வெளியிடப்பட்ட உடனே எக்ஸ்-பிளேடு ஆனது ஹோண்டா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எக்ஸ-பிளேட் பைக்கில் 13.9hp ஆற்றலை வெளிப்படுத்தும் 162.7சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க் 13.9Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் 276mm கொண்ட டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் 130mm டிரம் பிரேக் கொண்டதாக 140 கிலோ எடை உள்ள இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வந்துள்ள ஹோண்டா எஸ்பி பைக் விலை ரூ.1,17,500 முதல் ரூ.1,21,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.